நந்தினி நடிகைக்கு ஆபாச படங்களை அனுப்பிய வாலிபர்....


Murugan| Last Updated: செவ்வாய், 20 ஜூன் 2017 (17:20 IST)
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நந்தினி தொடரில் நடித்து வருபவர் நடிகை நித்யா ராம்.

 

 
இவர் சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில் ஒரு நபரின் புகைப்படம் மற்றும் அவரின் முகநூல் பக்கத்தை வெளியிட்டு, தன்னுடைய ரசிகர் எனக்கூறிக்கொள்ளும் அவர் தனக்கு தொடர்ந்து ஆபாச படங்களை அனுப்பி வருவதாக கூறியுள்ளார்.
 
மேலும், இது போன்ற செயல்களை நான் அனுமதிப்பதில்லை. இதுபற்றி மற்றவர்களுக்கு தெரியவேண்டும் என்பதற்காகவும், எந்த பெண்ணிடமும் அவன் இப்படி நடந்துகொள்ளக்கூடாது என்பதற்காகவுமே இதை இங்கு பதிவு செய்கிறேன். எனக்கு இனிமையான பல ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னிடம் காட்டும் அன்பு மற்றும் ஆதரவில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் ஒரு நடிகை என்பதை விட முதலில் நான் ஒரு பெண் என்பதை அவன் உணர்ந்துகொள்ள வேண்டும். பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதையடுத்து, சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :