தயாரிப்பாளர் சங்க தேர்தல் - குஷ்புவை களம் இறக்கும் விஷால்


Murugan| Last Modified ஞாயிறு, 1 ஜனவரி 2017 (18:54 IST)
தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் குஷ்பு போட்டியிடுவார் என நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

 

 
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் 2 வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும். 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், தயாரிப்பாளர் எஸ்.தாணு அணி வெற்றி பெற்றது.
 
அவர்களின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து, வருகிற பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஏற்கனவே டி.ராஜேந்தர் மற்றும் டி.சிவா தலைமையில் 2 அணி போட்டிடுகிறது. 
 
இந்நிலையில், நடிகை குஷ்பு இந்த தேர்தலில் போட்டியிடுவார் என விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அவருடன் போட்டியிடும் மற்ற நிர்வாகிகளுக்கான வேட்பாளர்கள் பற்றி அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனத் தெரிகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :