Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கொலை செய்யப்பட்ட நடிகை கிருத்திகா - அதிர்ச்சி தகவல்

Last Modified: புதன், 14 ஜூன் 2017 (13:19 IST)

Widgets Magazine

மும்பையில் தனது வீட்டில் பிணமாக கிடந்த பாலிவுட் நடிகை கிருத்திகா சவுத்ரி, மர்ம நபரால் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.


 

 
மும்பையில் மாடலாக இருந்து வந்தவர் கிரித்திகா சவுத்ரி. ஒரு சில சீரியலிலும், படங்களிலும் நடித்துள்ளார். இவர் மும்பையில் அந்தேரி பகுதியில் தங்கி வந்துள்ளார். இவரின் வீடு மூன்று நாட்கள் ஆகியும் பூட்டியப்படியே இருந்துள்ளது. மேலும், வீட்டை சுற்றி துர்நாற்றம் வீசத்தொடங்கியுள்ளது.
 
இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நேற்று போலீசாருக்கு தகவல் கூறினர். இதைனையடுத்து அவரின் வீட்டை உடைத்து போலீசார் உள்ளே சென்ற போது, அங்கு உடல் அழுகிய நிலையில் கிருத்திகா பிணமாக கிடந்தார். அவர் இறந்து 3 அல்லது 4 நாட்கள் ஆகியிருக்கலாம் எனத் தெரியவந்தது. 


 

 
எனவே அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துக்கொண்டாரா என்ற கோணத்தில் போலிஸார் விசாரணை நடத்தி  வந்தனர். 
 
இந்நிலையில், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து பார்த்த போது, அவரது தலையின் வலப்பக்கத்தில் யாரோ அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும், அவரின் உடல் சீக்கிரமாக அழுகி அதன் மூலம் அக்கம்பக்கத்தினருக்கு விரைவில் தெரியக்கூடாது என கருதிய கொலையாளி வீட்டின் ஏசியை ஆன் செய்து விட்டு சென்றிருக்கிறார்.
 
இதையடுத்து, கிருத்திகாவை கொலை செய்த அந்த மர்ம நபரை போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சூப்பர் சிங்கர் சீசன் 5 - இறுதிச்சுற்று

மிக பிரபலமான மற்றும் அனைவருக்கும் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியானது சூப்பர் சிங்கர். ...

news

வைரலாகும் வனமகன் கதாநாயகியின் கிளாமர் டான்ஸ் - வீடியோ!

தற்போதுள்ள நடிகர், நடிகைகள் அவர்கள் நடித்த படங்கள் வெளிவருவதற்கு முன், சமூக ...

news

மூன்று வேடங்களில் தனுஷ்

‘வடசென்னை’ படத்தில், மூன்று வேடங்களில் நடிக்கிறாராம் தனுஷ். வெற்றிமாறன் இயக்கத்தில் ...

news

நடிகை வீட்டில் தவம் கிடக்கும் கிளுகிளுப்பு இயக்குனர்கள்....

பாலிவுட் நடிகை ஆலியா பட் ஒரு பேட்டியில் கூறிய கருத்தின் காரணமாக தற்போது சிக்கலில் ...

Widgets Magazine Widgets Magazine