ஆபாசமாகத் திட்டும் பெண் நடிகைகள்


Cauveri Manickam| Last Updated: செவ்வாய், 9 மே 2017 (18:02 IST)
ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகள் தங்கள் பற்றி யாரேனும் வெளிப்படையாக ஆபசமாக கருத்து தெரிவித்தல் பதிலுக்கு அவர்களும் ஆபாசமாக திட்டுகிறார்கள்.

 

 
ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்த பின்னர், மீடியாக்களின் மீதான கவனம் கொஞ்சம் குறைந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும் இந்த சினிமாக்காரர்கள் இருக்கிறார்களே… முன்பெல்லாம் மீடியாக்கள் மூலமாக தகவல்களை மக்களுக்குத் தெரிவித்தவர்கள், இப்போதெல்லாம் ட்விட்டர் மூலமாகவே வெளியிட்டு விடுகின்றனர். சமயங்களில், ‘சுச்சி லீக்ஸ்’ போல அவர்களின் அந்தரங்கங்களே அதில் நாறுவதும் உண்டு.
 
ஒருவரைப் பற்றிப் புகழ்ந்தால், அதை லைக் மற்றும் ரீட்விட் செய்யும் சினிமாக்காரர்கள், விமர்சித்தாலோ வெளிப்படையாகவே ஆபாசமாகத் திட்டுகிறார்கள். சமீபத்தில், சின்னத்திரையில் கோலோச்சும் சித்தி நடிகையை ஒருவர் திட்ட, பதிலுக்கு இவரும் ஆபாசமாக ட்விட்டரிலேயே திட்டியுள்ளார். அதேபோல், கோயில் கட்டி சாமியாக கும்பிடப்பட்ட பூ நடிகையும், ட்விட்டரில் ஒருவரை ஆபாசமாகத் திட்டியுள்ளார். இதெல்லாம் எங்கே போய் முடியப்போகுதோ…


இதில் மேலும் படிக்கவும் :