உண்மையான பிக் பாஸ் யார் தெரியுமா? விவேக் பேட்டி!!


Sugapriya Prakash| Last Updated: வியாழன், 27 ஜூலை 2017 (21:32 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியை பலர் விமர்சித்தாலும் அந்த நிகழ்ச்சியின் தாக்கம் அனைவரிடமும் காணப்படுகிறது. அந்த வகையில் உண்மையான பிக் பாஸ் யாரென்று விவேக் தெரிவித்துள்ளார்.

 
 
நடிகர் விவேக் டாக்டர். அப்துல் கலாமின் அபிமானி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்நிலையில், அப்துல் கலாமின் 2 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, பேரணி ஒன்றிற்கு விருந்தினராக கலந்துக்கொண்டார்.
 
அப்போது செய்தியாளர்களிடம் விவேக் பின்வருமாறு கூறினார். அப்துல் கலாம் நினைவாக பசுமை கலாம் திட்டம் மூலம் ஒரு கோடி மரங்கள் நட திட்டமிட்மிட்டிருந்தேன் அதில் முதல் கட்டமாக 25 லட்சம் மரகன்றுகளை நட்டுள்ளேன். இன்னும் 3 ஆண்டுகளில் 1 கோடி மரங்கள் நடப்படும். 
 
இன்றைய மாணவர்களின் ஒரே ரோல் மாடல் அப்துல் கலாம்தான். பிக் பாஸ் என பலர் பலரை ஆதரித்தாலும் நமக்கெல்லாம் உண்மையான பிக் பாஸ் அப்துல் கலாம் ஒருவர் தான் என கூறியுள்ளார். 
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :