1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 7 மே 2017 (22:30 IST)

விஷாலுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை: 'பாகுபலி 2' படக்குழுவினர் புலம்பல்

கடந்த வாரம் வெள்ளியன்று வெளியான 'பாகுபலி 2' திரைப்படம் பத்தே நாட்களில் ரூ.1000 கோடி வசூல் செய்து சரித்திர சாதனை செய்துள்ள நிலையில் இந்த படத்தை இணையத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்.



 


'பாகுபலி 2' படம் இணையத்தில் வெளியிட்டது குறித்து அந்த படக்குழுவினர்களே கண்டுகொள்ளாத நிலையில் விஷால் ஏன் வாலண்டரியாக சென்று புகார் கொடுத்துள்ளார் என்பதே புதிராக இருப்பதாக பாகுபலி படக்குழுவினர் மற்றும்  கோலிவுட் திரையுலகினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இணையத்தில் படம் வெளியாவதால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவதாக விஷால் கூறும் கருத்தில் சிறிதுகூட உண்மை இல்லை என்பது 'பாகுபலி 2' திரைப்படம் இணையத்தில் வெளியாகியும் ரூ.1000 கோடி வசூல் செய்ததில் இருந்து தெரியவந்துள்ளது.

எனவே இணையத்தில் படம் வெளியாவதை தடுப்பதில் காட்டும் அக்கறையை, நல்ல கதையம்சத்துடன் கூடிய படம் எடுப்பதில் விஷால் போன்றோர் காட்டினால், தயாரிப்பாளர்கள் லாபம் அடையலாம் என்ற பாடத்தை உணர்த்தியுள்ளது பாகுபலி 2' என்பது குறிப்பிடத்தக்கது.