ஞாயிறு, 21 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By John
Last Updated : புதன், 2 ஏப்ரல் 2014 (12:00 IST)

விமலா ராமனின் விரும்பத்தகாத பழக்கங்கள்

தலைப்பைப் பார்த்து விவகாரமாக எல்லாம் யோசிக்காதீங்க. ரொம்ப சாதாரணமான விஷயம்தான். 
 
பாலசந்தரின் கண்டுபிடிப்பான விமலா ராமன் தமிழில் பெரிதாக சோபிக்கவில்லை. அவர் நடித்த ராமன் தேடிய சீதை நல்ல பெயரை வாங்கித் தந்தும் தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் போனது துரதிர்ஷ்டமே.
தற்போது தெலுங்கில் நடித்து வருகிறவர் அவ்வப்போது தன்னைப் பற்றிய சுவாரஸிய விஷயங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் பகிர்ந்திருப்பது, தனது மோசனமான இரு குணங்களைப் பற்றி.
 

எவ்வளவுதான் உடைகள் இருந்தாலும் அடிக்கடி ஷாப்பிங் சென்று ஆடைகள் வாங்கிக் குவிப்பது விமலா ராமனின் மோசமான குணங்களில் ஒன்றாம். இரண்டாவது அளவுக்கு அதிகமாக காபி அருந்துவது. இதையும் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லையாம்.
சிலருக்கு தேவைக்கே இல்லாமல் இருப்பது பிரச்சனை. விமலா ராமனுக்கு தேவைக்கு அதிகமாக இருப்பது பிரச்சனை.