Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அவசரம் வேண்டாம்.. பொறுமையா என்னை கலாய்ங்க - நடிகர் சிம்பு அதிரடி


Murugan| Last Updated: சனி, 17 ஜூன் 2017 (12:45 IST)
தன்னை கிண்டல் செய்பவர்களுக்கு நடிகர் சிம்பு அவரது பாணியில் பதில் அளித்துள்ளார்.

 

 
நடிகர் சிம்பு தற்போது (அன்பானவன் அசராதவன்  அடங்காதவன்) என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் ஒரு இணையதளத்திற்கு அவர் பேட்டியளித்தார்.
 
அதில், இணையத்தில் தன்னைப் பற்றி கிண்டலடிப்பவர்கள் பற்றி கருத்து தெரிவித்த அவர் “முன்பு என்னை நன்றாக கலாய்ப்பார்கள். தற்போது அந்த அளவுக்கு இல்லை. ஏன் அவசரமா கலாய்க்க நினைக்கிறீங்க? கொஞ்சம் டைம் எடுத்து பொறுமையா கலாய்ங்க. உங்ககிட்ட நான் நிறை எதிர்பார்க்கிறேன்” என கிண்டலாக கூறினார். மேலும், தன்னை பற்றி ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் நினைத்து வருவதால்தான், தன்னை கலாய்க்கிறார்கள். இது நல்லதுதான் எனவும் அவர் கூறினார்.
 
அதேபோல், என்னை பிடிக்காதவர்கள் முதல் மூன்று நாட்களுக்கு இந்த படத்தை பார்க்காதீர்கள். என்னை கலாய்க்கும் நோக்கத்தோடு நீங்கள் வந்தால் நிச்சயம் ஏமாந்து போவீர்கள் என அவர் கூறினார்.
 


இதில் மேலும் படிக்கவும் :