Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கொடூர வில்லனாக சிம்பு நடிக்கும் பில்லா-3 (அ) கெட்டவன் 2.0?


Murugan| Last Modified வெள்ளி, 28 ஜூலை 2017 (11:26 IST)
நடிகர் சிம்பு அடுத்து ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாகவும், அதில் அவர் ஒரு கொடூர வில்லன் வேடத்தில் நடிக்க இருக்கிறார் எனத் தகவல் வெளியாகவுள்ளது.

 

 
சிம்பு நடித்து சமீபத்தில் ரிலீசான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் வசூல் ரீதியாக படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், 2008ம் ஆண்டு சிம்பு நடிப்பதாக இருந்து பின் கைவிடப்பட்ட ‘கெட்டவன்’ படத்தை மீண்டும் அவர் கையில் எடுத்திருப்பதாக தெரிகிறது.  அந்த படத்திற்கு பில்லா-3 அல்லது என அவர் தலைப்பு வைப்பதற்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும், ஆங்கில படமான ‘டார்க் நைட்’ படத்தில் இடம்பெற்ற கொடூர வில்லன் போல் ஒரு கதாபாத்திரத்தை சிம்பு உருவாக்கியிருப்பதாகவும், அதில் அவரே நடிப்பார் எனவும் கூறப்படுகிறது. 
 
சமீபத்தில் சென்னையில் சில காட்சிகளை முன்னோட்டமாக அவர்  எடுத்ததாகவும், இந்த கதைக்கான ஹீரோயினை அவர் தேடி வருவதாகவும், இப்படத்தின் பல காட்சிகள் அமெரிக்காவில் எடுக்க அவர் திட்டமிட்டிருப்பதால், விரைவில் அவர் அங்கு செல்ல இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
 
விரைவில் இப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்கிற நிலையில், இப்படத்தை சிம்புவே இயக்கி, தயாரிப்பார் எனக் கூறப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :