செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Annakannan
Last Modified: வியாழன், 21 ஆகஸ்ட் 2014 (11:45 IST)

நடிகர் சென்ராயன் காதல் திருமணம்

தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் பைக் திருடனாக அறிமுகமானவர், வில்லன் நடிகர் சென்ராயன். அதைத் தொடர்ந்து சிலம்பாட்டம், ஆடுகளம், மூடர் கூடம் உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.
 
ஜீவா நடித்த ரௌத்திரம் படத்தில், பயங்கரமான வில்லனாக நடித்துப் பலராலும் பாராட்டப்பட்டவர் சென்ராயன்.
 
இவர் பட்டதாரிப் பெண்ணான கயல்விழி என்பவரைக் காதலித்து வந்தார்.

இரு வீட்டாரையும் சமாதானப்படுத்திய சென்ராயன், 2014 ஆகஸ்டு மாதம் 31ஆம் தேதி, கயல்விழியைத் திருமணம் செய்துகொள்கிறார்.
 
வத்தலகுண்டு பகுதியில் உள்ள சென்ராயப் பெருமாள் கோயிலில் இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
 
இந்தத் திருமணத்தில் கலையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொள்கிறார்கள்.