1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: திங்கள், 2 மே 2016 (15:40 IST)

உதயநிதியை பாராட்டிய ரஜினிகாந்த்

‘மனிதன்’ திரைப்படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், படக்குழுவினரையும், நடிகர் உதயநிதி ஸ்டாலினையும் பாராட்டியுள்ளார்.


 

 
கலைஞரின் பேரனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘மனிதன்’. இந்தியில் உருவான ஜாலி எல்.எல்.பி படத்தின் ரீமேக்கான இந்த படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
 
முந்தைய படங்களை காட்டிலும், இந்த படத்தில் உதயநிதி நன்றாக நடித்துள்ளதாக பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு இந்த படம் நேற்று திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
 
ரஜினிகாந்த், இந்த படத்தை மிகவும் பாராட்டியுள்ளதாக உதயநிதி தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். 
 
நேற்று இரவு சூப்பர் ஸ்டார் ‘மனிதன்’ படத்தை பார்த்தார். அந்த கதையை தேர்ந்தெடுத்ததற்காக அவர் படக்குழுவினை மிகவும் பாராட்டினார். அவருடைய பாராட்டு கிடைத்தது ஒரு ரசிகனாக எனக்கு மிகவும் அருமையான தருணம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.