வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: புதன், 4 மார்ச் 2015 (15:36 IST)

அமரன் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் கார்த்திக் - இயக்குனர் ராஜேஷ்வர் உறுதி

1992 -இல் வெளியான படம், அமரன். கார்த்திக் நடிப்பில் பிரமாண்டமாக தயாரான படம் ஓரளவு ஓடவும் செய்தது. ராஜேஷ்வர் அமரனை இயக்கியிருந்தார். கார்த்திக் இந்தப் படத்தில் முதல்முறையாக, வெத்தல போட்ட ஷோக்குல கப்புன்னு குத்தினேன் மூக்குல வந்தது பாரு ரத்தம்... என்ற பாடலை பாடியிருந்தார்.
 
இந்தப் படத்தின் சீக்வெலை இயக்கயிருப்பதாக ராஜேஷ்வர் தெரிவித்தார்.
 
இந்த சீக்வெலில் கார்த்திக் பிரதான வேடத்தில் நடிக்கிறார். அமரனின் தொடர்ச்சியாக இந்தப் படம் இருக்கும். மற்ற நடிகர்கள், ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை.