அடிபட்டாலும் ஷூட்டிங்கை நிறுத்தாமல் தொடர்ந்து நடித்த இனிகோ பிரபாகர்


Cauveri Manickam (Suga)| Last Modified சனி, 28 அக்டோபர் 2017 (15:50 IST)
ஷூட்டிங்கின்போது அடிபட்டுவிட, அந்த வலியைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடித்துக் கொடுத்திருக்கிறார் இனிகோ பிரபாகர்.

 
 
இனிகோ பிரபாகர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘வீரையன்’. தஞ்சாவூரில் ஷூட்டிங் நடந்த இந்தப் படம், உண்மைக்கதையை அடிப்படையாகக் கொண்டது. எந்த லட்சியமும் இல்லாமல் சுற்றித் திரியும் ஒருவன் வாழ்க்கையில் காதல் வருகிறது. அதன்பிறகு அவன் வாழ்க்கையில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதுதான் கதை.
 
பரித் என்பவர் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போது ஆக்‌ஷன் காட்சியில் இனிகோ பிரபாகருக்கு அடிபட்டிருக்கிறது. ஒரு வாரம் ரெஸ்ட் கேட்டிருக்கிறார் இனிகோ. ஆனால், அவரால் மற்றவர்களின் கால்ஷீட் பாதிக்கப்படுமே என்பதால் வலியைப் பொறுத்துக்கொண்டு நடித்திருக்கிறார் இனிகோ பிரபாகர்.


இதில் மேலும் படிக்கவும் :