நிர்வாணமாக புகைப்படம் எடுக்க ஆசைப்படும் பிரபல நடிகர்!

நிர்வாணமாக புகைப்படம் எடுக்க ஆசைப்படும் பிரபல நடிகர்!


Caston| Last Modified வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (10:59 IST)
மேட் இன் இண்டியா என்ற பாடலின் மூலம் மிகவும் பிரபலமான, பல ரசிகைகளை கவர்ந்த நடிகரும், மாடலுமான மிலிந்த் சோமன் மீண்டும் நிர்வாணமாக போஸ் கொடுக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

 
 
51 வயதான மிலிந்த் சோமன் தற்போது  மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். இதன் மூலம் இந்த வயதிலும் செம்ம ஃபிட்டாக உள்ளார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தான் ஓடுவதை சிறப்பாக உணர்வதாகவும், கூடுதல் தூரம் ஓட முயற்சி செய்யும் போது அது மகிழ்ச்சி தருவதாகவும் கூறினார்.
 
மேலும் மாடலிங் துறைக்கு வரும் முன்னர் யாரும் என்னை அழகானவன் என கூறியதில்லை. ஏன் என் பெற்றோர்கள் கூட அப்படி கூறியதில்லை. ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக கவர்ச்சிகரமான ஆண் என அழைக்கப்படுகிறேன்.


 
 
முன்னர் விளம்பரம் ஒன்றுக்கு நான் நிர்வாணமாக போட்டோஷூட்டில் கலந்து கொண்டேன். அந்த புகைப்படத்தால் சர்ச்சைகள் கூட வந்தன. ஆனால் அந்த புகைப்படம் மிகவும் அழகானது. எனது அம்மாவுக்கு கூட அந்த புகைப்படம் பிடித்திருந்தது.
 
அந்த நிர்வான புகைப்படத்தை எடுக்கும் போது எனக்கு எந்த சங்கடங்களும் இருக்கவில்லை. மீண்டும் அது போன்று நிர்வாணமாக போட்டோஷூட் நடத்துவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, விருப்பமாகவே உள்ளேன் என கூறியுள்ளார் மிலிந்த் சோமன்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :