1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By bala
Last Modified: செவ்வாய், 13 டிசம்பர் 2016 (15:27 IST)

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பரத்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் பரத் நடிக்க உள்ளார்.


 

ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் பரத். தொடர்ந்து செல்லமே, எம்டன் மகன், காதல்,வெயில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த படங்கள் வணிக ரீதியாக தோல்வியை தழுவின. இதனால் இவரது திரையுல பயணத்தில் ஒரு தேக்க நிலை உருவானது.

இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் தெலுங்கு படம் ஒன்றில் முக்கிய வேடம் ஒன்றில் பரத் நடிக்க உள்ளார். மகேஷ்பாபு நாயகனாக நடிக்கும் அந்த படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தில்  நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் வில்லன் வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது