வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By John
Last Modified: புதன், 2 ஏப்ரல் 2014 (11:46 IST)

ஏப்.14 அஜீத் படத்தின் பெயர், பர்ஸ்ட் லுக் வெளியீடு

ஏப்.14 தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் கௌதம் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதுப்படத்தின் பெயரை அறிவித்து, பர்ஸ்ட் லுக்கை வெளியிடுகிறார்கள்.
அஜீத்தின் 55 வது படத்தை கௌதம் இயக்குகிறார். தயாரிப்பு ஏ.எம்.ரத்னம். படத்தின் பெயர், அஜீத்தின் லுக், நாயகி போன்ற விஷயங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. படத்தில் இரு நாயகிகள். ஒருவர் அனுஷ்கா, இன்னொருவர் எமி ஜாக்ஸன். அஜீத் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக வருகிறார் என உறுதி செய்யப்படாத தகவல்கள் உலவுகின்றன. ஹாரிஸுடன் கௌதம் இந்தப் படத்தில் மீண்டும் இணையவிருப்பதாகவும் பேச்சு உள்ளது.
 
இம்மாதம் தொடங்கயிருக்கும் இப்படத்தின் பெயரையும், பர்ஸ்ட் லுக்கையும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிடுகிறார்கள். அன்றைய தினம் பல வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படலாம்.