வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 19 ஜனவரி 2019 (18:18 IST)

இனி நடிப்பு மட்டும் தான்! விஜய் ஆண்டனி அதிரடி

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, நடிகராக அவதாரம் எடுத்து நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் என பல ஹிட் படங்களை கொடுத்தார். ஆனால் எமன் படத்தில் இருந்து அவர் நடித்தஎந்த படமும் பெரிதாக ஓடவில்லை. 


 
இதற்கு காரணம், படங்களை அவரே தயாரிப்பதோடு, அந்தப் படங்களுக்கு இசையமைப்பது, படத்தொகுப்பு செய்வது என மொத்தபட வேலைகளை செய்வது தான்  என கூறப்பட்டது. இதையடுத்து முடிந்த அளவுக்கு வேற ஒரு இசையமைப்பாளரையும் படத்தொகுப்பாளரையும் எனது படங்களுக்கு கமிட் செய்வேன். இனி, நடிப்புக்கு அதிக கவனம் செலுத்துவேன்’ எனக் கூறியிருந்தார்.
 
சொன்னது போலவே அவர் புதிதாக நடிக்கும் தமிழரசன் படத்தில் இளையராஜா இசையமைக்க உள்ளார். இந்தப் படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். மேலும், படத்தொகுப்பை புவன் ஸ்ரீனிவாசன் செய்ய உள்ளார். இந்தப் படத்தில், இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் பிரணவ் மோகனும் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.