Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நான் 100 நாள் சுதந்திரமா இருக்கேன்: ஆர்த்தியின் கணவர் கணேஷ்


sivalingam| Last Modified சனி, 8 ஜூலை 2017 (04:49 IST)
விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை பார்க்கும் அனைவரும் ஆர்த்தியை வில்லி போலவே பார்க்கின்றனர். ஜூலியை அவர் ஃபேக் சென்று கூறி வெறுப்பேற்றுவது டிவி சீரியலில் வரும் வில்லி கேரக்டருக்கு சமமானவராக சித்தரிக்கப்படுகிறது.


 
 
இந்த நிலையில் ஆர்த்தி செய்வது கொஞ்சம் கூட சரியில்லை தான். ஆனால் அதே நேரத்தில் பிக்பாஸ் குடும்பத்தில் இருந்து ஒவ்வொருவராக விரட்டியடிப்பதுதானே விளையாட்டு. அந்த வகையில் பார்த்தால் ஆர்த்தி செய்வது சரிதான் என்று ஆர்த்தியின் கணவர் கணேஷ் கூறியுள்ளார்.
 
மேலும் ஜூலியும் எல்லாம் தெரிந்த மாதிரி நடிப்பது உண்மை தான், அவர் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம் என்று கூறிய கணேஷ், முதலில் ஆர்த்தி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் ஆர்வம் இல்லாமல் தான் இருந்தார். ஆனால் நானும் ஆர்த்தியின் அப்பாவும் தான் அவரை கலந்து கொள்ள ஊக்கம் கொடுத்தோம். முக்கியமான நான் ஒரு நூறு நாள் சுதந்திரமாக இருக்கலாமே' என்று கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :