Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

என்னை கேலி செய்த அனைவருக்கும் நன்றி: ஆர்த்தியின் முதல் டுவீட்


sivalingam| Last Modified திங்கள், 17 ஜூலை 2017 (23:20 IST)
பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய நடிகை ஆர்த்தி தனக்கு நடிக்க தெரியவில்லை என்றும் அதனால் தான் வெளியேற்றப்பட்டதாகவும் கமலிடம் கூறினார்.


 
 
ஆனால் உண்மையில் ஆர்த்தியின் கேரக்டர் விமர்சனத்திற்கு ஆளாகும் நிலையில் இருந்தது. இந்த நிலையில் வெளியில் வந்த பின்னர் தன்மீதான விமர்சனங்களையும் மிமிக்களையும் படித்து பார்த்த ஆர்த்தி, பின்னர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்/
 
என்னைப்பற்றி மிமி கிரியேட் செய்து பிசியாக இருந்தவர்கள் இனி ஓய்வு எடுத்து கொள்ளலாம். கேலியாக இருந்தாலும் என் மிமிக்கள் நல்ல கற்பனை வளத்துடன் காணப்பட்டது. அனைவருக்கும் நன்றி என்று கூறியிருந்தார். இருப்பினும் கஞ்சா கருப்பு, பரணி வெளியேறியபோது ஏற்பட்ட இரக்கமோ, வருத்தமோ ஆர்த்தி வெளியேறியதால் யாருக்கும் ஏற்படவில்லை என்பது தான் உண்மை


இதில் மேலும் படிக்கவும் :