Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

காயத்ரி ரகுராம் மீது போலீஸ் புகார்? கைது செய்யப்படுவாரா?


sivalingam| Last Modified வியாழன், 13 ஜூலை 2017 (00:03 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் விஜய் டிவியில் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி ஆரம்பித்த முதலாவது நாள் முதலே சர்ச்சைக்களுக்கு பஞ்சமில்லாமல் இருந்த நிலையில் தற்போது அது போலீஸ் புகார் வரை சென்றுள்ளது.
 
ஏற்கனவே இந்த நிகழ்ச்சியால் கலாச்சார சீரழிவு ஏற்படுவதாகவும், கமல்ஹாசன் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளது


 
 
இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஜாதி குறித்து காயத்ரி ரகுராம் கூறிய சர்ச்சைக்குரிய வார்த்தை ஒன்றால் கடந்த பல நேரமாக சமூக வலைத்தளத்தில் ஒரு விவாத பொருளாகிவிட்டது. இந்நிலையில் ஜாதி குறித்து இழிவாக பேசிய காயத்ரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளைஞர் ஒருவர் நாளை புகார் அளிக்கவுள்ளார். இந்த புகார் காரணமாக காயத்ரி கைது செய்யப்படுவாரா? பிக்பாஸ் வீட்டிற்குள் போலீஸ் நுழையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


இதில் மேலும் படிக்கவும் :