"நடிகர்களிடம் மாட்டிக்கொண்டேன் காப்பாற்றுங்கள்" - கதறும் பிரபல தமிழ் நடிகையின் பரபரப்பு வீடியோ!

Last Updated: சனி, 13 ஜூலை 2019 (14:30 IST)
தமிழ் சினிமாவில் பூந்தோட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை விஜயலக்ஷ்மி. அதனையடுத்து விஜய் , சூர்யா இணைந்து நடித்த ஃபிரெண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தின் தனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்ட அவருக்கு வாய்ப்புக்கள் சரியாக அமையவில்லை. அதனையடுத்து பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாக நடித்திருந்தார். பின்னர் கடைசியாக ஹிப்ஹாப் தமிழா ஆதி  நடிப்பில் வெளிவந்த மீசைய முறுக்கு படத்திலும் நடித்திருந்தார்.   


 
பின்னர் தொடர்ந்து தமிழ் சினிமாக்களில் வாய்ப்பு கிடைக்காததால் கன்னட சினிமா பக்கம் தலைகாட்ட ஆரம்பித்தார். ஆனால் அங்கும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.  இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக நடிகை விஜயலட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. 
 
இந்நிலையில் தற்போது தான் ஒரு தமிழ் பெண் என்ற காரணத்தால் கன்னட திரையுலகினர் மிகவும் துன்புறுத்துவதாக பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,   “நான் நடிகை விஜயலட்சுமி. தற்போது பெங்களூரில் இருந்து இந்த வீடியோவை வெளியிடுகிறேன். தமிழில் வாய்ப்பு குறைந்ததால் இங்கு வந்தேன். ஆனால் இங்கு என்னை மிகவும் சித்திரவதை செய்கின்றனர். 
 
காரணம் என்னுடைய பேசில் தமிழ் வருகிறது என கூறி கிண்டலடிக்கின்றனர். மேலும் எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது நடிகர் சுதீப் எனக்கு மருத்துவ செலவுக்கு உதவினார். பின்னர் வேறு ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டபோது ரவி பிரகாஷ் என்ற கன்னட நடிகர் எனக்கு உதவி செய்து விட்டு என்னை டார்ச்சர் செய்தார். 


 
அதுமட்டுமின்றை என்னைப் பற்றி ஊடகங்களிலும் தவறான செய்திகளைப் பரப்பியதால் நான் போலீசில் அவர் மீது புகார் அளித்திருந்தேன். பின்னர் நடிகர் ரவி பிரகாஷ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். எனக்கும் அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது மீண்டும் நான் வறுமையில் பணமின்றித் தவித்தேன். தற்போது தங்குவதற்கு கூட வீடின்றி வறுமையில் இந்த ஊரில் சிக்கிக் கொண்டு மிகவும் சிரமப்படுகிறேன். நான் ஒரு தமிழ்ப் பெண். மீண்டும் சென்னைக்கு வர விரும்புகிறேன்.


 
எனவே  தமிழ் மக்களின் கவனத்துக்கும், என்னுடைய திரையுலக நண்பர்களுக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். அதனால் தான் இந்த வீடியோவை வெளியிடுகிறேன்.எனக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்யுங்கள்” என்று கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை  விஜயலட்சுமி.


இதில் மேலும் படிக்கவும் :