Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

‘மெர்சல்’ இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கச்சேரி?


Cauveri Manickam (Suga)| Last Modified சனி, 5 ஆகஸ்ட் 2017 (18:22 IST)
விஜய்யின் ‘மெர்சல்’ இசை வெளியீட்டு விழாவில், ஏ.ஆர்.ரஹ்மான லைவ்வாக கச்சேரி நடத்த இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

 
 
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் ‘மெர்சல்’. விஜய் மூன்று வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தில், நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என அவருக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
 
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, வருகிற 20ஆம் தேதி பிரமாண்டமான முறையில் நடக்க உள்ளது. பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கின்றனர். இதில், ஏ.ஆர்.ரஹ்மான் லைவ்வாக கச்சேரி நடத்தலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கிடைத்துள்ளன. நீண்ட நேரம் இல்லாவிட்டாலும், கொஞ்ச நேரமாவது இசைக் கச்சேரி நடக்கலாம் என்கிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :