ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டிய “துருவங்கள் பதினாறு” ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Sasikala| Last Updated: வியாழன், 22 டிசம்பர் 2016 (16:22 IST)
துருவங்கள் பதினாறு படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன். இதில் ரஹ்மான் கதாநயகனாக நடித்துள்ளார். இப்படம் வெளியாக இருந்த டிசம்பர் 30-ம் தேதிக்கு ஒரு நாள் முன்பாகவே வெளியாகிறது. 21 வயது இளம் இயக்குநர் கார்த்திக் நரேனின் முதல் படம் துருவங்கள் பதினாறு.

 
இப்போது படம் முடிந்து திரைக்கு வருகிறது. படம் பார்த்த அத்தனை திரைப் பிரபலங்களும் இவர்தான் அடுத்த ஷங்கர், மணி ரத்னம் என்றெல்லாம் பாராட்டித் தள்ளியுள்ளனர். தனது நெருங்கிய உறவினரான ஏ. ஆர். ரஹ்மான் படத்தின் பிரிவியூ ஷோ பார்த்து கட்டிப்பிடித்து பாராட்டியதோடு, என் திரைவாழ்வில் இதுவரை இது போன்ற தமிழ்ப்படத்தை பார்த்தது இல்லை என்று கூறியிருந்தார். 
 
இந்தப் படத்தை முதலில் டிசம்பர் 30 ம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர். திரையுலகினரின் பாராட்டுகளை தொடர்ந்து ஒரு நாள் முன்பாக டிசம்பர் 29-ம் தேதியே படத்தை வெளியிடுகிறார்கள். இதனை நைட் நாஸ்டால்ஜியா தயாரித்துள்ள இந்தப் படத்தை ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :