1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : சனி, 3 மார்ச் 2018 (14:26 IST)

ஏ.ஆர்.ரஹ்மானின் மலையாளப்பட ஷூட்டிங் தொடங்கியது…

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் மலையாளப் படத்தின் ஷூட்டிங் நேற்று தொடங்கியது. 
பிளஸ்ஸி இயக்கத்தில் தயாராகும் மலையாளப் படம் ‘ஆடுஜீவிதம்’. பிருத்விராஜ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், அமலா பால் ஹீரோயினாக  நடிக்கிறார். வாழ்வதற்காக சவூதி அரேபியாவின் பாலைவனத்தில் வேலைபார்க்குமாறு கட்டாயப்படுத்தப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளியான நஜீப் முகமது என்பவரின் வாழ்க்கை வரலாறு தான் இந்தப் படம்.
 
இந்தப் படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 25 வருடங்களுக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் மலையாளப் படம் இது. ஆஸ்கர்  விருதுபெற்ற ரசூல் பூக்குட்டி சவுண்ட் இன்ஜினீயராகப் பணியாற்றுகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் நேற்று தொடங்கியுள்ளது.