70 வயது பாட்டியாக சமந்தாவை மிரட்டவரும் தேசிய விருது வென்ற நடிகை..!

Last Updated: திங்கள், 14 ஜனவரி 2019 (08:21 IST)
சமந்தாவின்  வயதான கதாபாத்திரத்தில் பிரபல பழம்பெரும் நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


 
தென்னிந்திய நடிகையான சமந்தா கொரியன் மொழியில் வெளியான ‘மிஸ் க்கிராணி ‘ என்ற படத்தின் ரீமேக்கில்  நடிக்க உள்ளார் . 
 
தெலுங்கை தொடர்ந்து தமிழிலும்  தயாராகும் இப்படத்தில் சமந்தாவின் வயதான தோற்றத்தில் பிரபல மூத்த நடிகை ஒருவர் நடிகக்வுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 
 
கடந்த 2014ம் ஆண்டு தென் கொரியாவில் தயாரிக்கப்பட்டு உலகளவில் வரவேற்பை குவித்த திரைப்படம் ‘மிஸ் கிரானி’. பின்னாளில் இது இந்தோனேஷியா, சீனா, ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு வசூலை வாரி குவித்தது. தற்போது இந்தியாவில் முதலில் தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் இப்படம், பிறகு தமிழிலும் தயாராகும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிகிறது. 
 
இப்படத்தின் மைய கரு " கணவனை இழந்த 74 வயது பெண் ஒருவர், போட்டோ ஸ்டுடியோவுக்கு செல்கிறார். அங்கு கிடைக்கும் மந்திர சக்திகள் மூலம் அவர் 25 வயது பெண்ணின் தோற்றத்தை பெறுகிறார்" . இதற்கு பிறகு நடக்கும் பிரமிக்கத்தக்க சம்பவங்களே ‘மிஸ் கிரானி’ படத்தின் முழு கதை. 


 
பேண்டஸி மற்றும் நகைச்சுவை பின்னணி கொண்ட இந்த படத்தின் இளமை கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வயதான பெண் கதாபாத்திரத்திற்கும் சமந்தாவையே படக்குழு தேர்வு செய்திருந்தனர். ஆனால் , மேக்-அப் டெஸ்ட் செய்து பார்க்கும் போது, அது அவருக்கு பொருந்தவில்லை என்பதால் படக்குழு வேறொரு நடிகையை நடிக்கவைக்க முயற்சி செய்தனர். 
 
இதற்கு சமந்தாவும் ஓகே சொல்ல தற்போது சமந்தாவின் வயதான தோற்றத்தில் மூத்த நடிகையும், தமிழ் சினிமாவில் முதல் தேசிய விருது வென்ற நடிகையுமான லக்ஷ்மி நடிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


 
பழப்பெறும் நடிகை லட்சுமி ‘மிஸ் கிரானி’ தெலுங்கு ரீமேக்கில் நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடப்படும் என தகவல்கள் கசிந்துள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :