செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 28 மே 2016 (12:04 IST)

படமாகும் நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு

படமாகும் நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு

இன்று மேக்கப் போடும் நடிகையும் சொல்லும் ஒரு விஷயம், நடிகையர் திலகம் சாவித்திரி போல் பெயர் வாங்க வேண்டும். நடிகர்களுக்கு ஆதர்ஷம் சிவாஜி என்றால் நடிகைகளுக்கு சாவித்திரி.


 
 
ஏழ்மையான குடும்ப சூழலில் இருந்து வந்து தனது நடிப்புத் திறமையால் முன்னணி நடிகையானவர் சாவித்திரி. 
 
அவர் நடித்த காலத்தில் தமிழ், தெலுங்கு, இந்தியில் அவரை நடிப்பில் வீழ்த்த ஆளில்லாமல் இருந்தது. சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் என்று தமிழின் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். பாசமலர், நவராத்திரி உள்பட ஏராளமான படங்கள் அவரது திறமைக்கு சான்றாக உள்ளன.
 
ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்து கொண்ட சாவித்திரி ஒருகாலத்தில் பணத்தில் மிதந்தார். படங்கள் இயக்கினார். படங்கள் தயாரித்தார். அவர் தயாரித்த படங்களின் தோல்வி அவரை பொருளாதாரரீதியாக வீழ்த்தியது. கவலையை மறக்க மதுவுக்கு அடிமையானார். அவரது இறுதிகாலம் சோகமயமானது. 
 
சாவித்திரியின் வாழ்க்கையை தமிழ், தெலுங்கில் திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குனர் நாக் அஸ்வின். மகாநதி என்று படத்துக்கு பெயரும் வைத்துள்ளார்.
 
சாவித்திரியாக யாரை நடிக்க வைக்கப் போகிறார் என்பதுதான் நாக் அஸ்வின் எதிர்கொள்ளவிருக்கும் பெரும் சவால்.