5.... 6.... 7....

FILE

வெவ்வேறு மொழி பேசும் ஒரு ஆணும் பெண்ணும் காதல் வயப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் காதலை எப்படி புரிய வைக்கிறார்கள்., காதலர்களாக எப்படி தொடர்கிறார்கள் என்பதை நகைச்சுவையோடு எடுத்திருக்கிறார்களாம்.

Webdunia|
மீனாட்சி சுந்தரம், பச்சோந்தி, உமா சங்கர், கணேஷ், பைசு என 5 பாடலாசிரியர்கள்.
அல்ரூபியன், கார்த்திக் ஆச்சார்யா, தீசன், சூரிய பிரசாத், பிரவீன் சக்ரவர்த்தி, ராஜேஷ் என 6 இசையமைப்பாளர்கள். 7 பின்னணி பாடகர்கள் என அனைவரையும் புது முகங்களாக அறிமுகப்படுத்தும் படம் வடக்கும் தெற்கும்.
நாயகனான அம்ரீஷ், நாயகியான பிரியங்கா இவர்களும் புது முகங்களாகும். பெரும்பாலான படப்பிடிப்பை வேலூர், திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முடித்திருக்கிறார்கள். விரைவில் திரைக்கு வரும் இப் படத்தை ஜி.ராஜேந்திரன் இயக்கியுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :