Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

துல்கர் சல்மான் ஜோடியாக 4 ஹீரோயின்கள்?

Cauveri Manickam (Sasi)| Last Updated: செவ்வாய், 13 ஜூன் 2017 (11:30 IST)
துல்கர் சல்மான் நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக 4 ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாகத் தகவல்  கிடைத்துள்ளது.
 
 
மலையாளத்தில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். தமிழில், ‘வாயை மூடி பேசவும்’, ‘ஓ காதல் கண்மணி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். இவர் நடிக்க இருக்கும் மூன்றாவது தமிழ்ப் படத்தை, அறிமுக இயக்குநரான  ரா.கார்த்திக் இயக்குகிறார். கெனன்யா ஃபிலிம்ஸ் சார்பில் செல்வகுமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
 
‘தெறி’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஜார்ஜ் சி வில்லியம் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். ‘தேசிய விருது’ பெற்ற  எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், எடிட்டராகப் பணியாற்ற உள்ளார். இந்தப் படத்தில், துல்கருக்கு ஜோடியாக 4 ஹீரோயின்கள் நடிக்கிறார்களாம். ஆனால், அவர்கள் யார் என்ற விவரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.


இதில் மேலும் படிக்கவும் :