வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: புதன், 27 மே 2015 (13:09 IST)

வெளிநாடுகளில் 36 வயதினிலே, புறம்போக்கு வசூல் நிலவரம்

36 வயதினிலே சென்ற வார இறுதியில் யுஎஸ்ஸில் 12 திரையிடல்களில் 12,182 டாலர்களை வசூலித்தது. இங்கு கடந்த ஞாயிறுவரை வசூல், 45.12 லட்சங்கள். அட்டகாசமான வசூல்.
 
புறம்போக்கு யுஎஸ்ஸில் கடந்த வார இறுதியில் 2 திரையிடல்களில் 560 டாலர்களை வசூலித்தது. கடந்த ஞாயிறுவரை 10.10 லட்சங்கள். யுகே மற்றும் அயர்லாந்தில் கடந்த வார இறுதியில் 5 திரையிடல்களில் 2,102 பவுண்ட்களை வசூலித்தது. கடந்த ஞாயிறுவரை 16.28 லட்சங்கள்.
ஆஸ்திரேலியாவில் 36 வயதினிலே கடந்த வார இறுதியில் 6 திரையிடல்களில் 1,0251 ஆஸ்திரேலிய டாலர்களை வசூலித்தது. கடந்த ஞாயிறுவரை 28.53 லட்சங்கள்.
 
ஆஸ்திரேலியாவில் புறம்போக்கு கடந்த வார இறுதியில் 2 திரையிடல்களில் 1,040 ஆஸ்திரேலிய டாலர்களை வசூலித்தது. கடந்த ஞாயிறுவரை 11.08 லட்சங்கள்.
 
மலேசியாவில் 36 வயதினிலே கடந்த ஞாயிறுவரை 52.96 லட்சங்களை வசூலித்துள்ளது. இங்கு புறம்போக்கின் வசூல் 17.07 லட்சங்கள்.