1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: செவ்வாய், 24 நவம்பர் 2015 (15:40 IST)

11 நாளில் 266.64 கோடிகள் - இது சல்மான் பட சாதனை

சல்மான் கானின் பிரேம் ரத்தன் தான் பயோ திரைப்படம் முதல் 11 தினங்களில் இந்தியாவில் மட்டும் 193.22 கோடிகளை வசூலித்துள்ளது.


 
 
சென்டிமெண்ட், காதல் என கலந்துகட்டி தயாரான படம், பிரேம் ரத்தன் தான் பயோ. சோனம் கபூர் நாயகியாக நடித்த இந்தப் படம், வெளியான முதல் நாள் முதல் வசூலில் பட்டையை கிளப்புகிறது. இந்தி சினிமா வரலாற்றில் முதல் நாள் வசூலில் இப்படம் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. வார இறுதி வசூலில் முதலிடம்.
 
வார நாள்களிலும் படம் கணிசமாக வசூலித்து வருகிறது. முதல் 11 தினங்களில் இந்தியாவில் மட்டும் 193.22 கோடிகளை வசூலித்துள்ளது. வெளிநாடுகளையும் சேர்த்தால் 266.64 கோடிகள்.
 
சல்மான் கானின் இதுவரையான படங்களில் இந்தப் படமே அதிகம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளிலும் சல்மான் படங்களில் இந்தப் படமே அதிகம் வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது.