1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 9 ஜூன் 2017 (15:37 IST)

60 வயது ஹீரோவுக்கு 20 வயது ஹீரோயினா? நடிகை ஆவேசம்

60 வயது ஹீரோவுக்கு 20 வயது நடிகையை ஹீரோயினாக போடுகிறார்கள் என மலையாள நடிகை ரிமா கல்லிங்கல் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


 

 
மலையாள திரையுலகில் ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கு சம்பளம் இல்லை என்றும், சரிசமமாக நடத்தப்படுவது இல்லை என்றும் நடிகைகள் தெரிவித்துள்ளனர். மலையாள நடிகைகள் தங்கள் ஆதங்கத்தை துணிச்சலாக தெரிவித்துள்ளனர்.
 
இதுகுறித்து பிரபல மலையாள நடிகை ரிமா கல்லிங்கல் கூறியதாவது:-
 
ஒரு 20 வயது நடிகையை 60 வயது ஹீரோவுக்கு ஜோடியாகவும், 50 வயது நடிகையை 60 வயது நடிகருக்கு அம்மாவாகவும் நடிக்க வைக்கிறார்கள். இது மலையாளத்தில் மட்டுமல்ல மற்ற திரையுலகிலும் இப்படி நடக்கிறது. நடிகர்களுக்கு கிடைக்கும் சம்பளம், புகழ், மரியாதை ஆகியவற்றில் குறைந்த அளவே நடிகைகளுக்கு கிடைக்கிறது என்றார்.