Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

`2.O' படக்குழு ரசிகர்களுக்கு அளிக்கும் 3டி சிறப்பு விருந்து: அக்‌ஷய் குமார் தகவல்

வெள்ளி, 6 அக்டோபர் 2017 (11:01 IST)

Widgets Magazine

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.O'. ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். எமி ஜாக்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படக்குழு ரசிகர்களுக்கு நாளை 3டி சிறப்பு விருந்து அளிக்கப்படுகிறது.

 
ரூ.400 கோடி செலவில் உருவாகி வரும் `2.O' படத்தின் வியாபாரம் சூடுபிடித்துள்ள நிலையில், இதனை உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. சமீபத்தில் இப்படத்தில் இருந்து மேக்கிங் வீடியோ  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், 3டி-யில் மேக்கிங் வீடியோ ஒன்று நாளை மாலை 6 மணிக்கு வெளியிட இருக்கிறார்கள். இதனை இப்படத்தில் நடிக்கும் அக்‌ஷய் குமார் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். `2.0' படத்தின் இசை வெளியீடு அக்டோபரிலும், டீசர் நவம்பரிலும், டிரைலர் டிசம்பரிலும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இப்படம் அடுத்த ஆண்டு (2018) ஜனவரி 25ஆம் தேதி திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

நடிகை கங்கனா ரனாவத் நிர்வாண புகைப்படம் - ரித்திக் ரோஷன் பதில் என்ன?

நடிகை கங்கனா ரனாவத் தனது நிர்வாண புகைப்படத்தை தனது மின்னஞ்சலுக்கு அனுப்பவில்லை என ...

news

தீபாவளிக்கு 'மெர்சல்' உறுதி: தேனாண்டாள் முரளி நம்பிக்கை

விஜய் படம் ஒன்று பிரச்சனை இல்லாமல் வெளியானதாக சரித்திரமே இல்லை. விஜய் படத்திற்கு கடைசி ...

news

இது பிரியாணி கொடுத்து கூட்டிய கூட்டம் அல்ல: ஓவியா குத்தி காட்டுவது யாரை?

பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஒருசில நாட்களில் உலகம் முழுவதும் பிரபலம் ஆகிவிட்ட நடிகை ஓவியா ...

news

மெர்சல் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பேன். அஸ்வின்

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'மெர்சல்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து இணையதளங்களில் பல ...

Widgets Magazine Widgets Magazine