Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஒரே நாளில் 13 படங்கள் ரிலீஸ்!!


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 20 மார்ச் 2017 (17:57 IST)
வரும் வெள்ளிக்கிழமை (24/03/2017) ஒரே நாளில் 13 திரைப்படங்கள் வெளியாக உள்ளது. 

 
 
வெள்ளிக்கிழமை புதிய திரைப்படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்று. வெள்ளிக்கிழமையை தொடர்ந்து இரு விடுமுறை நாட்கள் வருவதால் வசூல் ரீதியாக திரைப்படங்கள் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும்.
 
இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 13 படங்கள் வெளியாக உள்ளது. இதனால் தியேட்டர் கிடைக்க சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
 
எங்கிட்ட மோதாதே, பாம்புச் சட்டை, வைகை எக்ஸ்பிரஸ், கடுகு, சாந்தன், தாயம், ஆக்கம், ஜூலியும் நான்கு பேரும், ஒரு கனவு போல, 1 ஏ.எம், இவன் யாரென்று தெரிகிறதா?, 465, அரசகுலம் ஆகிய 13 படங்கள் வெளியாக இருக்கிறது.
 
ஒரே நாளில் 13 படங்கள் வெளியாவதால் சில படங்கள் வெளியாவது தள்ளிபோக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :