வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: திங்கள், 12 மே 2014 (14:45 IST)

’மோதும்’ தயாரிப்பாளர்கள்

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் முடிந்ததில் இருந்தே மோதல்களுக்கு பஞ்சமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. அது மேலும், வலுவடையும் நிலையில், தற்போதைய தலைவராக இருந்து வந்த கேயார்.
 ’தயாரிப்பாளர்களுக்கு மாத பத்தாயிரம் வழ்ங்கப்படும்’ என்றும், ’இவ்வளவு நாட்கள் பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்திருக்கிறார்கள்’ என்றும் எதிர் தரப்பினர் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். 
 
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ‘கலைப்புலி’ தாணு, டி.ஜி.தியாகராஜன், சிவா, ஞானவேல் ராஜா ஆகியோர்.. கேயார் மீது நம்ப்பிகையில்லா தீர்மானம் கொண்டு வந்ததின் பேரில், நேற்று நீதிபதி சண்முகம் தலைமையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கேயார் தோல்வி அடைந்தார். 
 
அவருக்கு ஆதரவாக, 186 பேரும், எதிர்த்து 261 பேரும் வாக்களித்துள்ளதால், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் நடக்கவுள்ளது.