வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: திங்கள், 12 மே 2014 (14:57 IST)

’இன்னும் நான் மாணவன்தான்’

சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியின் ஆண்டு விழா நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்டு, ஆண்டு மலரை வெளியிட்டு பேசினார்.. கல்லூரியின் முன்னால் மாணவரான ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்.
 
’எத்தனையோ படங்கள் ஒளிப்பதிவு செய்திருந்தாலும் இன்னும் நான் மாணவனாகத்தான் இருக்கிறேன். தினம் தினம் புதுப்புது விசயங்களை கற்றுக் கொண்டே இருக்கிறேன். எந்த வயதிலும் கற்பது தவறில்லை.

ஒளிப்பதிவாளர்களும் சினிமாவோடு நிறுத்திக் கொள்ளாமல், திருமணப்பதிவு, விளம்பரப் படங்கள் ஆவணங்கள் என்று மற்ற விஷயங்களிலும் ஈடுபாடு காட்ட வேண்டும். சினிமாவையும் தாண்டி எவ்வளவோ இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்’ என்றார். 
 
இந்த விழாவில் கல்லூரி முதல்வர் லோ.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் முதல்வர் ரவிராஜ், ஒளிப்பதிவாளகள் மற்றும் ஏராளமான மாணவர்களும் கலந்து கொண்டனர்.