‌வியாபா‌ரியா‌ல் பழனி படத்திற்கு சிக்கல்

Webdunia| Last Modified வெள்ளி, 21 டிசம்பர் 2007 (13:00 IST)
ஷக்தி சிதம்பரம் தயாரிப்பில் பரத் நடிக்க பேரரசு இயக்கும் படம் பழனி. இப்படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகம் இருந்தாலும் பிசினஸ் ரீதியாக பிரச்னை எழுந்துள்ளது.

இதற்கு முன் ஷக்தி சிதம்பரம் தயாரித்து இயக்கிய வியாபாரி படம் விநியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டத்தை கொடுத்திருக்கிறது.

அப்படத்தின் நஷ்டத்தை சரிகட்டினால்தான் பழனி படத்தை வாங்குவோம் என்று விநியோகஸ்தர்கள் போர் கொடி தூக்கி இருக்கிறார்கள்.

என்ன செய்வது என்று தெரியாமல் கைபிசைந்து நிற்கிறாராம் ஷக்தி சிதம்பரம்.


இதில் மேலும் படிக்கவும் :