‌கிளாம‌ர் ஆ‌ட்‌ட‌த்‌தி‌ற்கு ச‌ரியான வரவு சோனா

Webdunia| Last Modified புதன், 19 டிசம்பர் 2007 (14:55 IST)
மிருகம் படம் பார்த்த அத்தனை பேரும் கேட்கும் ஒரே கேள்வி படத்தில் விமலாவாக நடித்திருக்கும் சோனா பற்றித்தான்.

இப்போதைக்கு கிளாமராக ஆட்டம் போட ஆள் இல்லை என்ற நிலையில் சோனா பிரமாதமான வரவு என்று சொல்கிறார்கள்.

ஆனால் தமிழ் தெலுங்கு என்று கிட்டத்தட்ட பதினைந்துக்கும் அதிகமான படங்களில் நடித்தவர்தான்.

நடுவில் சினிமா வேண்டாம் என்று சொல்லிவிட்டு மலேசியாவில் ப்யூட்டி பார்லர் ஆரம்பித்து செட்டிலாகிவிட்டார்.
கரு.பழனியப்பன் இயக்கிய சிவப்பதிகாரம் படத்தின் மூலம் ரீ எண்ட்ரீ ஆகியிருந்தாலும் அவருக்கு பேர் சொல்லும்படியாக அமைந்திருப்பது மிருகம் படம்தானாம்.

படத்தின் இயக்குனர் சாமிக்கு தனிப்பட்ட முறையில் தன் நன்றியை தெரிவித்துக் கொண்டிருக்கும் இவர் பற்றி இன்னொரு ஹாட் நியூஸ்...
அம்மணி இரவானால் இளம் ஹீரோக்களோடு டிஸ்கொதே பார்ட்டிகளில் பட்டயைக் கிள‌ப்புவார் என்பது!


இதில் மேலும் படிக்கவும் :