ஸ்ரீகாந்த் தேவா எடுத்த 20 நாட்கள்

Webdunia| Last Modified புதன், 7 ஜனவரி 2009 (22:30 IST)
தேவாவைவிட அவரது மகன் ஸ்ரீகாந்த தேவா பாஸ்ட். பத்தே நாளில் ஒரு முழு படத்தை முடிக்கும் அளவுக்கு திறமைசாலி. அவர் ஒரு படத்தின் பின்னணி இசை சேர்ப்புக்கு முழுதாக 20 நாட்கள் எடுத்துக் கொண்டார் என்றால்..?

இந்த ஆச்ச‌ரியம் நடந்திருப்பது, வைதேகி படத்தில். பாண்டியராஜனின் மகன் ப்ருத்வி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் அவரது ஜோடியாக கார்த்திகா நடிக்கிறார். மதுசந்தா இன்னொரு ஹீரோயின். ஒரு இளம் பெண்ணுக்குள் காதல் எப்படி மொட்டவிழ்கிறது என்பதை சொல்கிறது, வைதேகி.

மென்மையான இந்த கதையில் இன்வால்வாகி பின்னணி இசை சேர்ப்புக்கு மட்டும் 20 நாட்கள் எடுத்துக் கொண்டாராம் ஸ்ரீகாந்த் தேவா. ஜெமினி ராகவா படத்தை இயக்கியிருக்கிறார்.
தூத்துக்குடிக்குப் பிறகு வெற்றிப் படம் எதுவும் தராத கார்த்திகா, வைதேகி வந்தால் எனது ரேஞ்சே வேறு என நம்பிக்கையுடன் கூறி வருகிறார். பார்ப்போம் வைதேகி வாழ வைக்கிறதா என்று.


இதில் மேலும் படிக்கவும் :