1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 17 ஏப்ரல் 2014 (14:56 IST)

விஜய்க்காக வெயிட்டிங்கில் எம்ஜிஆர் படம்

பெண்கள் மத்தியில் விஜய்க்கு பெயர் வாங்கித் தந்த படங்களில் முக்கியமானவை நினைத்தேன் வந்தாய், ப்ரியமானவளே. இந்தப் படங்களை இயக்கியவர் செல்வபாரதி. அவரின் இயக்கத்தில் நடிப்பதை விஜய் பெரிதும் விரும்பினார். காமெடியுடன் காதல், சென்டிமெண்டை கலந்து தருவதில் செல்வபாரதி கைதேர்ந்தவர்.
கடைசியாக விஜய் செல்வபாரதியின் இயக்கத்தில் நடித்தது வசீகரா. காமெடி வொர்க் அவுட்டானாலும் படம் சரியாகப் போகவில்லை. இந்தப் படத்தில் விஜய் எம்ஜிஆர் ரசிகராக நடித்திருந்தார்.
 
விஜய்யை எம்ஜிஆர் ரசிகராக மாற்றிய செல்வபாரதி அவருக்காக ஒரு எம்ஜிஆர் படத்துடன் காத்திருக்கிறார். புரியலை? எம்ஜிஆர் நடித்த எங்க வீட்டுப் பிள்ளையை விஜய்யை வைத்து ரீமேக் செய்ய முயன்று வருகிறார் செல்வபாரதி.
 
எம்ஜிஆரின் ஹிட் படங்கள் சில டஜன்கள் தேறும். அதில் முக்கியமானது எங்க வீட்டுப் பிள்ளை. அதனை ரீமேக் செய்யும் திட்டத்திலிருக்கிறார் செல்வபாரதி. எம்ஜிஆர் நடித்த வேடத்தில் அவரின் சாய்ஸ் விஜய்.
 
முருகதாஸ், சிம்புதேவன், சசிகுமார் என்று பிஸியாகப் போய்க் கொண்டிருக்கும் விஜய்யின் சினிமா கரியரில் செல்வபாரதிக்கு இப்போதைக்கு இடம் கிடைக்குமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.