வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: புதன், 30 ஏப்ரல் 2014 (13:35 IST)

விக்ரம் படவாய்ப்பு - சுசீந்திரன் படத்தை உதறிய விஜய் மில்டன்

விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்ததால் சுசீந்திரனின் வீர தீர சூரன் படத்திலிருந்து விலகினார் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்.
விஷ்ணு, ஸ்ரீதிவ்யா நடிக்கும் வீர தீர சூரனில் ஒளிப்பதிவாளராக விஜய் மில்டன் ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பும் நடந்து வந்தது. இந்நிலையில் விஜய் மில்டனின் இயக்கத்தில் வெளியான கோலிசோடா அவரே எதிர்பார்க்காத அளவுக்கு வசூலையும் பாராட்டுக்களையும் பெற்றுத் தந்தது. பெரிய நடிகர்கள் விஜய் மில்டனின் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டினர். அவரும் விக்ரமிடம் ஒரு கதை கூறினார். கதை விக்ரமுக்கு பிடித்தது. ஐ முடிந்ததும் கால்ஷீட் தர விக்ரம் முன்வந்தார்.
 
விக்ரம் நடிக்கும் படத்தின் வேலைகளை கவனிக்க வேண்டியிருந்ததால் சுசீந்திரனின் படத்திலிருந்து விலகினார் விஜய் மில்டன். தற்போது அவருக்குப் பதில் வீர தீர சூரனுக்கு மதியை ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்துள்ளனர்.