செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By John
Last Updated : சனி, 12 ஏப்ரல் 2014 (18:59 IST)

வாலு படத்தில் நடிக்க மறுத்தாரா...? ஹன்சிகா தரப்பு மறுப்பு

வாலு படத்தின் பாடல் காட்சிகளில் நடிக்க ஹன்சிகா கால்ஷீட் தர மறுப்பதாகவும், அவர் சொல்வது போல் மே, ஜுனுக்கு மேல் கால்ஷீட் தந்தால் அது எனக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் எனவும் வாலு படத்தின் தயாரிப்பாளர் சக்ரவர்த்தி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் தந்தார்.
இந்த புகாரை ஹன்சிகாவின் பிஆர்ஓ மறுத்துள்ளார்.
 
வாலு படத்தின் பாடல் காட்சிக்கு ஹன்சிகா பலமுறை தந்த கால்ஷீட்டை அவர்கள் பயன்படுத்தவில்லை. .

அந்த தேதிகளை வீணடித்துவிட்டனர். கடந்த இரண்டு வருடங்களில் ஒன்பது முறை வாலு படத்துக்கு ஹன்சிகா கால்ஷீட் தந்துள்ளார். 
தற்போது ஹன்சிகா வேறு படங்களில் நடித்து வருகிறார். வாலு பட தயாரிப்பாளருக்கு அவசரமாக கால்ஷீட் தேவைப்பட்டால் ஹன்சிகா நடிக்கும் மற்ற பட தயாரிப்பாளர்களிடம்தான் அவர் கேட்க வேண்டும் என்று கூறினார்.
 
வாலு படத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்துள்ளனர். டாக்கி போர்ஷன் முடிந்து பாடல் காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட உள்ளது விஜய் சந்தர் இயக்க நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி படத்தை தயாரித்து வருகிறார்