வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Updated : வெள்ளி, 6 ஜூன் 2014 (17:39 IST)

வாக் பாக்சிங்... ஈட் பாக்ஸிங்... ஸ்லீப் பாக்ஸிங்...

கடந்த ஆறுமாத காலமாக லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கிறார் நடிகர் மாதவன். அவரை கடைசியாகப் பார்த்தது 2012-ல் வெளிவந்த வேட்டையில். ஏறக்குறைய அதே காலகட்டத்தில் அவரது கடைசி இந்திப் படமும் வெளியானது. அதன் பிறகு நீண்ட இரண்டு வருட விடுமுறை.
 
தனக்குள் புதிதாக ஒன்றை கண்டுபிடிக்க ஒவ்வொரு நடிகனுக்கும் இந்த பிரேக் தேவை என்கிறார் மாதவன். அப்படி அவர் தனக்குள் எதை கண்டு பிடித்தார்?
லால் என்ற படத்தில் நடிக்கயிருக்கிறார் மாதவன். லால் அமெரிக்காவின் உலகப்புகழ்பெற்ற குத்துச் சண்டை வீரர் முகமது அலியின் வாழ்க்கையை மாதிரியாகக் கொண்டு தயாராகும் படம். முகமது அலியை நமக்கு திரையில் நினைவூட்டப் போகிறவர் மாதவன். ரன், வேட்டை படங்களில் மாய்ந்து மாய்ந்து சண்டையிட்டும் சாக்லெட் பாய் இமேஜை மாதவனால் போக்க முடியவில்லை என்றால் அதற்கு முக்கிய காரணம் அவரது உடலமைப்பு. கடந்த ஆறு மாதங்களில் அதனை அடியோடு மாற்றியிருக்கிறார். இப்போது என்னுடைய தோற்றம், உடல்மொழி, நடவடிக்கை எல்லாமே ஒரு பாக்ஸரைப் போல மாறியிருக்கிறது என அவரே தெரிவித்துள்ளார். கடும் உடற்பயிற்சியில் மாதவனின் 15 கிலோ எடையும் கரைந்துள்ளது.
 
முதல் படம் அலைபாயுதே வெளியான போதே அகில உலக மாதவன் ரசிகர் மன்றம் அமைக்க பலரும் மாதவனை அணுகினர். நடிப்பது என் தொழில், பிடித்தால் பார், பாராட்டு. பிடிக்காவிட்டால் உன் வழியே போ என்று மன்றமே வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தார். அதேபோல் ஹீரோயிச கதாபாத்திரங்களை மட்டும் தேடாமல் விதவிதமான கேரக்டர்களில் விரும்பி நடித்தார். இப்போது தன்னை முற்றிலும் புதுப்பித்துக் கொண்டு புத்துணர்ச்சியுடன் திரும்பி வருகிறார்.
 
மாதவனுக்கு ஒரு வார்ம் வெல்கம்.