வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: வியாழன், 8 மே 2014 (15:56 IST)

லிங்காவில் வடிவேலு

இனிமேல் நடிகர் வடிவேலுவுக்கு சினிமா வாய்ப்பே இருக்காது, அப்படி நடித்தாலும் ரிலீஸாக முடியாமல் அரசியல் சிக்கல்கள் ஏற்படும் என்று பலரும் தங்களது படங்களில் இருந்து நீக்கினார்கள். அதில், ரஜினி படம் ஒன்றும் அடங்கும். 
அப்படிப்பட்ட சூல்நிலையிலிருந்து மீண்டு வந்த வடிவேலு, சமீபத்தில் நாயகனாக நடித்த தெனாலிராமனும் எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால், பல்வேறு தயாரிப்பு நிறுவனமும் அவரை அணுகி வருகிறார்கள். முன்பு போல அதிக சம்பளமும் கேட்பதில்லை என்பதால், வாய்ப்புகள் வர ஆரம்பித்திருக்கிறது. 
 
அந்த வகையில், தற்போது ரஜினி நடிக்கும் லிங்கா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி, ஒரு மாதம் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் வடிவேலு. இவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்பது ரஜினியின் விருப்பமாம்.