வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: வியாழன், 24 ஏப்ரல் 2014 (13:42 IST)

ராமானுஜன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

மோகமுள், பாரதி, பெரியார் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஞான ராஜசேகரன் இந்திய கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறை படமாக எடுத்துள்ளார். ராமானுஜன் என்ற பெயரிலேயே இப்படம் தயாராகி உள்ளது.
பிரபலங்களின் வாழ்க்கையை படமாக்குவது ஞான ராஜசேகரனுக்கு இது முதல்முறை அல்ல. ஏற்கனவே பாரதி மற்றும் பெரியாரின் வாழ்க்கையை படமாக்கியுள்ளார். பாரதி படத்துக்கு நிறைய பாராட்டும் கொஞ்சமாக திட்டும், பெரியார் படத்துக்கு நிறைய திட்டும் கொஞ்சம் பாராட்டும் ஞான ராஜசேகரனுக்கு கிடைத்தது.
 
ராமானுஜன் படத்தில் வாலி, நா.முத்துக்குமார் இருவரும் பாடல் எழுதியுள்ளனர். எடிட்டிங் லெனின். 
 
வரும் 26ஆம் தேதி படத்தின் ட்ரெய்லரை யு டியூபில் நேரடியாக வெளியிடுகின்றனர்.