செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By John
Last Modified: ஞாயிறு, 6 ஏப்ரல் 2014 (12:48 IST)

மே 9 முதல் சந்தானத்தின் ஹீரோ அவதாரம்

சந்தானம் கண்ணா லட்டுதின்ன ஆசையா படத்தில் ஹீரோவாக நடித்திருந்தாலும் அது மல்டிஹீரோ சப்ஜெக்ட். தனி ஹீரோவாக அவர் களமிறங்கியிருக்கும் படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். பிவிபி சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் மே 9 திரைக்கு வருகிறது.
பஸ்டர் கீடனின் மௌனப் படம் அவர் ஹாஸ்பிடாலிட்டியை தழுவி எஸ்.எஸ்.ராஜமௌலி தெலுங்கில் மரியாத ராமண்ணா என்ற படத்தை எடுத்தார். அதுவரை முன்னணி ஹீரோக்களை வைத்து ஹிட் தந்தவர் முன்னணி நடிகர்கள் இல்லாமல் காமெடியனை வைத்தும் ஹிட் தரமுடியும் என்பதை நிரூபிப்பதற்காகவே அப்படத்தை எடுத்தார். படத்தின் ஹீரோ தெலுங்கு சினிமாவின் காமெடியன் சுனில். ஆந்திராவில் படம் ஹிட்.
 
அந்தப் படத்தை இந்தியில் சன் ஆஃப் சர்தார் என்ற பெயரில் எடுத்தனர். அஜய்தேவ் கான் நடித்த அப்படம் நூறு கோடி கிளப்பில் இணைந்தது. அதனைதான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பெயரில் எடுத்து வருகின்றனர்.
 
படத்தின் பாடல்களை ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிட்டு மே 9 படத்தை வெளியிடுவதாக திட்டம். ஆடியோ விழாவில் ஆந்திர பிரமாண்டம் ராஜமௌலியும், தமிழக பிரமாண்டம் ஷங்கரும் கலந்து கொள்கின்றனர். 
 
இரண்டாம் உலகம் படத்தை தயாரித்து கண்டபடி நஷ்டப்பட்ட பிவிபி சினிமாஸ் அந்த வலிக்கான ஒத்தடத்தை இந்தப் படம் தரும் என்று நம்புகிறது.