1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: புதன், 30 ஏப்ரல் 2014 (13:13 IST)

முண்டாசுப்பட்டி ஏன் ப்ரீயட் ஃபிலிம்...?

ஃபாக்ஸ் ஸ்டார் ஸடுடியோவுடன் இணைந்து சி.வி.குமார் தயாரித்திருக்கும் படம் முண்டாசுப்பட்டி. பாகவதர் ஹேர் ஸ்டைலுடன் ஹீரோ விஷ்ணுவை பார்க்கும் போதே இதுவொரு ப்ரீயட் ஃபிலிம் என்பது தெரிந்துவிடும்.
கதைக்கு அவசியமேயில்லாமல்தான் பலரும், இந்த கதை நடக்குறது எண்பதுகளில் என்று பில்டப் தருகிறார்கள். ஏன் இதேகதையை இந்த காலகட்டத்தில் எடுக்க வேண்டியதுதானே என்று லாஜிக் பேசுகிற அளவுக்குதான் இருக்கும் படத்தின் கதை. ஆனால் முண்டாசுப்பட்டி அப்படி கிடையாதாம். கதைக்கு எண்பதுகளுக்கு நாம் போயே ஆக வேண்டும். அப்படியென்ன கதை...?
 
போட்டோ எடுத்தால் ஆள் செத்துப் போய்விடுவான் என்று நம்புகிற ஒரு கிராமத்தில் படம் எடுக்க வரும் ஹீரோ என்னென்ன பாடுகள் படுகிறார் என்பதுதான் கதையாம். சினிமா குறித்தும், போட்டோகிராஃபி குறித்தும் அதிகம் தெரியாத காலகட்டம் இந்தக் கதைக்கு ரொம்பவும் அவசியம். கிராமத்து ஆட்களே ஆண்ட்ராய்ட் போனை அண்ட்ராயருக்குள் வைத்து அலையும் 2014ல் இந்தக் கதை நடப்பதாக காட்டினால் தியேட்டரே சிரித்துவிடும். அதனால்தான் எண்பதுகளில் கதை நடப்பதாக கொஞ்சம் பின்னோக்கி போயிருக்கிறார்கள்.
 
படத்தை இயக்கியிருக்கும் ராம் யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாமல் நேரடியாக படம் செய்ய வந்திருக்கிறார்.
 
அப்போ படம் பார்க்கிற மாதிரிதான் இருக்கும்.