வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: செவ்வாய், 3 ஜூன் 2014 (16:37 IST)

மீண்டும் யுவன் - கார்த்தி கூட்டணி

கார்த்தியின் இரு புதிய படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
 
கார்த்தியின் வெற்றியில் யுவனுக்கு கணிசமான பங்குண்டு. அவரின் முதல் படம் பருத்திவீரனுக்கு யுவன்தான் இசை. படம் பம்பர்ஹிட். கார்த்தியின் மற்ற வெற்றிப் படங்களான பையா, நான் மகான் அல்ல படங்களுக்கும் இசை யுவன். இவ்விரு படங்களுமே அதன் பாடல்களால் பிரபலமடைந்தவை. பிரியாணி இசையும் யுவனே.
தற்போது அட்டகத்தி ரஞ்சித்தின் படத்தில் நடித்து வரும் கார்த்தி அடுத்து குட்டிப்புலி முத்தையாவின் கொம்பன் படத்தில் நடிக்கிறார். ஞானவேல்ராஜா தயாரிக்கும் கொம்பனுக்கு இசையமைக்க யுவனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
 
அதேபோல் லிங்குசாமியின் இயக்கத்தில் கார்த்தி நடிக்கயிருக்கும் எண்ணி ஏழு நாள் படத்துக்கும் யுவன் இசையமைக்கிறார். இந்தப் படங்கள் கார்த்தியின் தோல்வி சரித்திரத்தை மாற்றும் என நம்பப்படுகிறது.