வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 7 ஏப்ரல் 2014 (20:04 IST)

மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் விஷால்

வெற்றி பெற்றவர்கள் மீண்டும் இணைவது தமிழ் சினிமாவில் சகஜம்தான். பாண்டிய நாடு வெற்றிப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் சுசீந்திரன், விஷால் ஒன்றிணைகிறார்கள்.
ராஜபாட்டை, ஆதலால் காதல் செய்வீர் படங்கள் சுமாராகப் போனதால் சுசீந்திரனுக்கு ஒரு வெற்றி தேவைப்பட்டது. அதேபோல் விஷாலுக்கும். பாண்டிய நாடு இருவரின் தோல்வி வறட்சிக்கு ஒரு முடிவு கட்டியது.
 
விரைவில் மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கிறார். ஹரியின் பூஜை படம் முடிந்ததும் இருவரும் இணைய வாய்ப்புள்ளது. 
 
தற்போது விஷ்ணு நடிக்கும் படத்தை இயக்குவதில் பிஸியாக உள்ளார் சுசீந்திரன்.