மாசி மாசம் ஆளான பொண்ணு...

Webdunia| Last Modified திங்கள், 5 மே 2008 (20:53 IST)
தர்மதுரை படத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்ற பாடல், மாசி மாசம் ஆளான பொண்ணு...

ரஜினி, கெளதமி ஆடும் இந்தப் பாடலை ரீ-மிக்ஸ் செய்துள்ளார் ஸ்ரீகாந்த் தேவா. படம் 'பாண்டி'.

ராகவா லாரன்ஸ், சினேகா நடித்திருக்கும் பாண்டி ஏறக்குறைய முடிந்துவிட்டது. லாரன்ஸ் இந்த உயரத்திற்கு வந்ததற்கும், ராகவேந்திரர் பக்தர் ஆனதற்கும் ரஜினியே முக்கிய காரணம். இதற்கும் ரஜினி பாடலை ரீ-மிக்ஸ் செய்ததற்கும் தொடர்பு உண்டென்று நீங்கள் நினைத்தால், அதில் தவறில்லை.
பாண்டியை விட அதன் இயக்குனர் மதுரவன் விஷயம் இன்னும் சுவாரஸ்யம். பாண்டி படத்துக்காக மதுரவன் என்ற தனது பெயரை கதாக மதுரவன் என மாற்றினார். படப்பிடிப்பு முடிந்த நிலையில், கதாக மதுரவன் என்பதை ராசி மதுரவன் என்று மாற்றியுள்ளார். படம் வெளியாகும் போது மேலுமொரு முறை அவர் தனது பெயரை மாற்றலாம். எதற்கும் ரசிகர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.


இதில் மேலும் படிக்கவும் :