வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Updated : செவ்வாய், 6 மே 2014 (20:06 IST)

மனோஜ் பரமஹம்சாவின் பூவரசம் பீப்பீ - படங்கள்

விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு ஒளிப்பதிவு செய்ததும் மனோஜ் பரமஹம்சா செய்த முதல்வேலை பூவரசம் பீப்பீ படத்துக்கான வேலையை ஆரம்பித்தது. ஈரம், நண்பன் படங்களுக்கு அவர் ஒளிப்பதிவு செய்து முடித்தவேளையில் பூவரசம் பீப்பீயும் முழுமையாக தயாராகியிருந்தது. 
தனது தயாரிப்பில் உருவான இந்தப் படத்தைப் பற்றி மீடியாவில் அதிகம் வராமல் பார்த்துக் கொண்டார். ஏன், என்ன காரணம்... அவருக்கே வெளிச்சம். ஆனால் இந்த மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் பூவரசம் பீப்பீ தயாராகி இரு வருடங்களாகிறது.
 

ஹலிதா ஷமீம் பூவரசம் பீப்பீயின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பதுடன் படத்தின் எடிட்டிங்கையும் கவனித்துள்ளார். கிராமத்து குழந்தைகளின் விடுமுறை கொண்டாட்டங்கள் படத்தில் பிரதானமாக வருகிறது. ஒரு வன்முறையை அந்த குழந்தைகள் காண நேர்ந்த பிறகு குழந்தைகளின் உலகம் எப்படி மாறிப் போகிறது என்பதையும் காட்சிப்படுத்தியுள்ளனர்.
இந்தப் படத்தின் சிறப்பு அம்சம் அருள்தேவின் இசை. பட்டா பட்டி, பலே பாண்டியா போன்ற பல படங்களில் நல்ல இசையை தந்தும் இன்னும் வெளிச்சதுக்கு வராமலிருக்கும் திறமையான இசைக்கலைஞர்.
 
இந்த மாதம் படம் திரைக்கு வருகிறது.

பூவரச‌ம் ‌பீ‌‌ப்‌பீ!